எஸ்பிஐ வங்கியானது சமீபத்தில் 2 டோல் ஃப்ரீ நம்பர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த டோல் ஃப்ரீ எண்களின் அறிமுகம் காரணமாக, இனி வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவையை பெறுவதற்காக வங்கியில் மணி கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. வாடிக்கையாளர்களின் வசதிக்காக 1800 1234 மற்றும் 1800 2100 என்ற இலவச தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக வாடிக்கௌயாளர்களுக்கு 44 விதமான சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த சேவையானது 24 மணி நேரமும், அனைத்து நாட்களிலும் செயல்படக் கூடியது.
குறிப்பாக ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் இந்தச் சேவையை பெறமுடியும். வாடிக்கையாளர்கள் தங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் மற்றும் கடைசி 5 பரிவர்த்தனைகள் ஆகியவற்றை இதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஏடிஎம் கார்டு பிளாக்கிங் சேவை, கார்டு விடுவிப்பு சேவை ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். தங்களுக்கான செக் புக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ள நிலை குறித்தும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.