Categories
மாநில செய்திகள்

மக்களே காசி யாத்திரை போக நீங்க ரெடியா?…. மொத்த செலவும் அரசே ஏற்கும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம், பொருளாதாரம் மற்றும் கல்வி அனைத்தையும் இன்றைய தலைமுறை நாள் அறிந்து கொள்ள வசதியாக பாரதிய பாஷா சமிதி என்ற அமைப்பு வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை  டிசம்பர் 19ஆம் தேதி வரை நடத்துகின்றது. இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள் மற்றும் விவாத அரங்குகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அறிவுசார் ஒத்துழைப்பை வழங்க உள்ளது. அத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற விருப்பமுள்ளவர்களை காசிக்கு இலவசமாக அழைத்துச் செல்வதற்கும் சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்து மதத்தை சேர்ந்த இறை நம்பிக்கை உள்ள 60 முதல் 70 வயது உடைய 200 பேரை தமிழக அரசு காசிக்கு ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்கின்றது. தமிழ்நாட்டின் இருபது மண்டலங்களிலிருந்து தலா 10 பேர் வீதம் 200 பேருக்கான மொத்த செலவு 50 லட்சத்தை இந்து சமய அறநிலையத்துறை ஏற்கிறது. ராமேஸ்வரம் கோவிலில் இருந்து காசி வரை இந்த பயணம் இருக்கும். விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |