Categories
மாநில செய்திகள்

மக்களே…. குடும்பத் தலைவர் பெயரை ரேஷன் கார்டில் மாற்ற தேவையில்லை…. தமிழக அரசு…..!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. தமிழக மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில் குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே இல்லத்தரசிகளுக்கு அரசியல் உரிமை தொகையான ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று தவறாக தகவல் பரப்பப்பட்டு வருகின்றது. இது இல்லத்தரசிகளுக்கான திட்டம் என்பதால் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக பட்ஜெட் தாக்கலின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்றும், அது யாருக்கெல்லாம் பொருந்தும் என்றும் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |