Categories
தேசிய செய்திகள்

மக்களே! குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000…. முதல்வர் புதிய அறிவிப்பு…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5000 வரை நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே மீனவர், கட்டட தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள், மீனவர்கள் 1.10 லட்சம் பேர் மழை நிவாரணம் பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |