Categories
மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்… பேருந்துகளில் இனி ரயில்களைப் போல புதிய வசதி… விரைவில் அறிமுகம்…!!!!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் சுமார் 6,000 பேருந்துகளில் ஜியோ கோட்டிங் செய்து பேருந்து நிறுத்தங்களை கண்டறியும் வசதி இரண்டு வருடங்களுக்கு முன்பே நிறைவு பெற்றுள்ளது. ஆனால் தற்போது 500 பேருந்துகளில் அந்த அமைப்புகளை நிறுவும் பணி தொடங்கி இருக்கின்றது. இதற்காக ஒவ்வொரு பேருந்துகளிலும் ஆறு ஸ்பீக்கர்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் பேருந்துகளில் பேருந்து நிறுத்தங்களை அறிவிப்பதற்கான அமைப்புகளை நிறுவும் பணி தொடரும் அதன் பின் படிப்படியாக அனைத்து பேருந்துகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் முதற்கட்டமாக அடுத்த பேருந்து நிறுத்தம் குறித்து அறிவிப்புகள் தமிழில் மட்டுமே அறிவிக்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு பிறகு மேம்படுத்தப்படும்போது ஆங்கிலத்திலும் அறிவிக்கும் விதமாக மாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அறிவிப்பானது ஒரு பேருந்து நிறுத்தம் வருவதற்கு 200 முதல் 250 மீட்டர் தொலைவில் இருக்கும் போது பேருந்தில் அறிவிக்கப்படும் விரைவில் அனைத்து விதமான பேருந்துகளிலும் இந்த வசதி வந்துவிடும் என கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வசதி முதற்கட்டமாக 37 ஜி என்னும் பேருந்தில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சென்னையில் மொத்தமாக 602 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றது அதில் 626 நிறுத்தங்கள் இருக்கின்றது. இரண்டு பேருந்து நிறுத்தங்களுக்கு இடையே சராசரியாக 500 முதல் 600 மீட்டர் இடைவெளி இருக்கும் இந்த நிலையில் தற்போது 200 முதல் 250 மீட்டருக்கு முன்பே பேருந்து நிறுத்தம் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

Categories

Tech |