Categories
மாநில செய்திகள்

மக்களே….! “கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி”…. வெளியானது இறுதிப்பட்டியல்….!!!!

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் 5 பவுன் வரை நகை தள்ளுபடி பெரும் பயனாளர்களின் பட்டியல்கள் அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வாங்கிய பயனாளர்களுக்கு 5 சவரன் அளவுள்ள நகைகடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் முக ஸ்டாலின் வாக்குறுதியளித்தார். இந்நிலையில் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் தகுதியற்றோர் பட்டியலில் உள்ளனர். இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், நிபந்தனைகள் இன்றி அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 5 பவுனுக்கு மிகாமல் நகை அடகு வைத்ததில் தகுதியானவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணி நடைபெற தொடங்கியது. அந்த சமயத்தில் நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் சான்றிதழ் வழங்கும் பணி தாமதமானது. தற்போது தேர்தல் முடிவடைந்த பிறகு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் பெறும் பயனாளிகளின் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. தேனி, மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தணிக்கை துறையை சேர்ந்த அலுவலர்கள் 81 பேர் சேலம் மாவட்ட கடன் தள்ளுபடி பயனாளிகள் பட்டியலை துல்லியமாக ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது 91 சங்கம் வங்கியில் ஆய்வு முடிவடைந்துள்ளது. இன்னும் 224 சங்கப் பயனாளிகள் பட்டியல் அடுத்தடுத்து ஆய்வு செய்யப்பட்டு இறுதிப்பட்டியல் தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் அனுப்பப்படும் என்று சேலம் மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |