தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நேற்று முன்தினம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது கனமழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.
அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அரசு அவர்களுக்கு வேண்டிய பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.இந்நிலையில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவோர், ஜெ ஜெ உள் விளையாட்டு அரங்கத்திற்கு நேரில் கொண்டு வந்து பொருட்களை வழங்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. அதற்காக https://forms.gle/NKEVTjvsH8hKTvoo9 என்ற இணையதளத்தில் தன்னார்வலர்கள் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 94445025821 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது..