நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதன் காரணமாக கிரி வலத்திற்கு அனுமதி அளித்தால் பல மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே கொரோனா பரவல் அதிகரிக்கும். இதன் காரணமாக பக்தர்கள் யாரும் திருவண்ணாமலை கிரி வலத்திற்கு வரவேண்டாம் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனாவால் கடந்த ஆண்டும் காரணமாக கிரிவலம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.