இந்திய மக்களுக்கு விரைவில் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய கோவின் எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது வரை லட்சக்கணக்கான உயிர்களை பறி போய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் ஒவ்வொரு நொடியும் வீணடிக்காமல் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் சில இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளன.
இந்நிலையில் இந்திய மக்களுக்கு விரைவில் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய கோவின் எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு சர்க்கரை மற்றும் இதய நோய் உள்ளவர்கள் தாங்களே இச்செயலில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பைசர் மற்றும் பாரத் பயோடெக், சீரம் ஆகிய மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிக்கு ஒப்புதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் நீண்ட நாள் நோய் பாதிப்பு உள்ளவர்கள் இந்தச் செயலியில் பதிவு செய்வதன் மூலம் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.