டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா நிலவரம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம், மக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், “தலைநகர் டெல்லியில் திங்கட்கிழமை நிலவரப்படி கொரோனா தொற்று புதிதாக 2.70 சதவீதம் பேருக்கு உறுதியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு மீண்டும் அதிகரித்து வருகிறது. நாங்கள் கொரோனா நிலவரம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். எனவே, மக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம். சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்” என்று அவர் கூறியுள்ளார்.