Categories
தேசிய செய்திகள்

மக்களே…! கொரோனா 4-வது அலை எப்போது தெரியுமா…? வெளியான முக்கியம் தகவல்…!!!!

இந்தியாவில் கொரோனா  நான்காவது அலை பற்றிய கணிப்புகளை ஐ.ஐ.டி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

கொரோனாவானது இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின் 2021 ஆம் ஆண்டு இரண்டாவது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. இதற்கு அடிப்படையாக அமைந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான்அதிவேக பரவல்  கொண்டுள்ளது. எனினும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சமீபகாலமாக பாதிப்புகள் குறைந்து வருகிறது. இந்நிலையில் நான்காவது பற்றிய கணிப்புகள் வெளிவந்துள்ளது. இது பற்றிய ஆராய்ச்சிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியா இந்தியாவில் நான்காவது அலை வருகிற ஜூன் 22ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24ஆம் தேதி வரை நீடிக்கும்.

இந்த  புதிய கொரோனா வகைகளின் வெளிப்படுதல் மற்றும் பூஸ்டர் டோஸ் , மக்களின் தடுப்பூசி நிலை ஆகியவற்றிற்கு ஏற்ப நான்காவது அலையின் கடுமையும் அமையும்.  ஒரு வேளை நான்காவது தொடங்கினால் 4 மாதங்கள்வரை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அலையானது ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை உச்சமடையும் அதன்பின் குறைய தொடங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐ.ஐ.டி கான்பூர் நாட்டில் கொரோனா  மூன்றாவது முறையாக கணித்து வெளியிட்டுள்ளது. அவற்றில் 3வது அலகில் கணிப்பு ஒரு சில நாட்கள் தள்ளி சென்றது தவிர்த்து, துல்லியமாகவே  அமைந்திருந்தது.

Categories

Tech |