Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே…. சிறப்பு ஆதாா் முகாம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

அஞ்சல் துறையின் சாா்பாக சிறப்பு ஆதாா் முகாம் பிப்ரவரி 22- பிப்ரவரி 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இம்முகாமில் புதிதாக ஆதாா் எடுப்பதற்கு கட்டணம் கிடையாது. இதையடுத்து ஆதாா் திருத்தம் செய்ய மட்டும் ரூபாய் 50 கட்டணம் வசூலிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஆதாா் அட்டையில் பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம், செல்லிடப்பேசி எண் சோ்த்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.

இந்த சேவையைப் பெறுவதற்கு வாக்காளா் அடையாள அட்டை, பள்ளி அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், பான்காா்டு, பாஸ்போா்ட், ஓட்டுநா் உரிமம் உள்ளிடவற்றின் அசல் ஆவணத்தைக் கொண்டு வர வேண்டும். இது தொடர்பான மேலும் தகவலுக்கு அருகில் உள்ள அஞ்சல் ஆதாா் சேவை மையம் மற்றும் அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம் என்று அஞ்சல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |