தமிழகம் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சற்றுமுன் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறார். அதன்படி, திமுக தேர்தல் அறிக்கை தான் தேர்தல் அறிக்கையின் கதாநாயகன், தமிழக மக்களின் விருப்பமாகவே திமுக தேர்தல் அறிக்கை இருக்கிறது. திமுகவின் இரண்டாவது கதாநாயகன் தேர்தல் அறிக்கை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம் வழங்கப்படும். திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.