கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சிலிண்டர் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டு 1018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சிலிண்டர் மானியம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு முன்பு சிலிண்டருக்கான மானியத்தை பொறுத்தவரையில் மானியத்தொகை கழிந்த பிறகு மீதமுள்ள தொகையை மட்டும் வாடிக்கையாளர்கள் செலுத்தி கேஸ் சிலிண்டரை வாங்கிக்கொள்ளும் நடைமுறை நாடு முழுவதும் அமலில் இருந்தது.
அதில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மானிய தொகையை அரசே வழங்கி விடும்.அதன்பிறகு ஆதார் இணைக்கும் முறை நடைமுறைக்கு வந்ததால் வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்ரீ இதற்கான மொத்த தொகையையும் செலுத்தி சிலிண்டரை வாங்கிக் கொள்ள வேண்டும். அதில் உரிய மானிய தொகை மட்டும் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அதன்பிறகு 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தது.
அதனால் 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மத்திய அரசு சிலிண்டர் மானியம் வழங்குவதை நிறுத்தி வைத்தது. இருந்தாலும் தற்போது குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 10 லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் கொண்ட அனைவருக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அதில் பலருக்கு மானியம் வருவதில்லை என்று கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்கள் அனைவருக்கும் மானியம் வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மானியம் வழங்குவதை அரசு தற்போது நிறுத்திவிட்டது. இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் சேமிக்கப்படுகிறது.
இதையடுத்து சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் கிடைக்கின்றது என ஆராய்ந்ததில் மாதம்தோறும் 24.95 ரூபாய் வாடிக்கையாளர்களுக்கு மானியம் செலுத்தப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிலிண்டர் மானியம் தொடர்பாக கேரள நிதியமைச்சர், சிலிண்டர் மானியத்தை முழுவதுமாக நிறுத்துவதற்காகவே வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மானியம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் சிலிண்டருக்கு மானியம் அறிவிக்கப்படவில்லை. தற்போது 1,000 ரூபாய்க்கு மேல் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனைப் போலவே ஒவ்வொரு மாநிலத்திலும் சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டுள்ளதால் அரசுக்கு அதிக அளவு சேமிப்பு கிடைக்கின்றது. எனவே சிலிண்டர் மானியம் முடிவுக்கு வருகிறதா என்பது பற்றி கேஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்களிடம் பேசியதில்,காலப்போக்கில் மானியம் எல்லாம் நிறுத்தப்பட்டு மொத்தமாக சிலிண்டர் விலையை கொடுத்து வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டிய நிலை வந்து விடும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
உங்களுக்கு சிலிண்டர் மானியம் வருகிறதா என்பதை நீங்களே எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.
* அதற்கு முதலில் mylpg.in இணையதளத்திற்குச் செல்லவும்.
* வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்.பி. கேஸ் ஆகிய மூன்று எல்பிஜி சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படமும் இருக்கும்.
* அதில் உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* பிறகு பார் மெனுவுக்குச் சென்று ’Give your feedback online’என்பதைக் கிளிக் செய்யவும்.
* உங்களுடைய மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் தகவல்களை நிரப்பவும்.
* இதற்குப் பிறகு, ‘Feedback Type’ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் ’Complaint’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Next’ என்பதை கிளிக் செய்யவும்.
* உங்கள் வங்கி விவரங்கள் புதிய துணைப்பக்கத்தில் வெளியாகும். மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்ததா இல்லையா என்பதை அதில் நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.