Categories
தேசிய செய்திகள்

மக்களே சிலிண்டர் மானியம்…. புதிய ரூல்ஸ் வந்தாச்சு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

மத்திய அரசின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் மானியத்தில் புதிய மாற்றம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிலிண்டருக்கு  மானிய உதவி பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் காத்திருக்கிறது. மத்திய அரசின் உஜ்வாலா  யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்புக்கு வழங்கப்படும் மானியத்தின் பெரிய மாற்றம் நடைபெற உள்ளது. புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் உஜ்வாலா  திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களுக்கான மானிய சுமை  குறையும் என நம்பப்படுகிறது. இதற்கான பணியில் பெட்ரோலிய அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற பட்ஜெட்ல்  ஒரு கோடி புதிய சிலிண்டர்  இணைப்புகள்  வழங்குவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் இதற்கான முன் பணம் செலுத்தும் முறையை மத்திய அரசு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய விதிமுறையின்படி முன் பணம் செலுத்தும் நிறுவனம் மொத்தமாக ரூபாய் 1600 வசூலிக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் எண்ணெய் விநியோக நிறுவனங்கள் சிலிண்டர்  இணைப்புக்கான முன்பணத்தை இஎம்ஐ மூலமாக வசூலித்து வருகின்றன.

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் மற்றும் எரிவாயு அடுப்பு வழங்கப்படுகிறது.இதன் விலை ரூ 3,200 இந்த தொகையில் அரசிடமிருந்து 1,600 ரூபாய் மானியம் கிடைக்கிறது. மேலும் மீதமுள்ள ஆயிரத்து1,600 ரூபாயில் எண்ணெய் விநியோக நிறுவனங்கள் முன் பணமாக கொடுக்கின்றன. ஓவ்வொரு மாதமும் இந்த தொகையை சிலிண்டர்  நிறுவனத்திடமிருந்து  எண்ணெய் விநியோக நிறுவனங்கள்  வசூலித்து கொள்கின்றனர்.

Categories

Tech |