சோவியத் யூனியனின் அமைப்பில் உள்ள பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப் போகின்ற காரணத்தால்உக்ரைனை தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால் அந்த நாட்டு மக்கள் தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.
இதற்கு இடையில் “நோட்டா” நாடுகள் கூட்டமைப்பு இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் ரஷ்யா மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே ரசியாவிற்கும் ,உக்ரைன்னிற்கும் இடையே சண்டை தீவிரமாகி வருகிறது. உக்ரைனில் நிலவும் பதற்றத்தை தொடர்ந்து அமெரிக்கா தனது மக்களை உக்ரேனை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அதை தொடர்ந்து இஸ்ரேலும் தன் குடிமக்களை அவசரமாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. மேலும் அதை தளமாக கொண்ட k.l.m. விமான நிறுவனம் உக்ரைன் நாட்டிற்கான அனைத்து விமானங்களையும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்துள்ளதாக தெரிகிறது.இதில் முன்னதாகவே நாட்டில் இருந்து வெளியேறும்படி தனது நாட்டு மக்களை நெதர்லாந்து அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.