Categories
தேசிய செய்திகள்

மக்களே…. சுய தொழில் தொடங்க 10 லட்சம் வரை கடன்…. எப்படி பெறுவது?…. இதோ எளிய வழி…!!!!

சுயதொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு போதுமான பணம் கிடைப்பதில் பெரும் சிக்கலாகி விடுகிறது. அதனால் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. அவ்வகையில் மத்திய அரசு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் தொகைகளை வழங்கி வருகின்றது.இந்த கடனை பெற எந்த வித ஒரு சொத்து சம்பந்தப்பட்ட சான்றிதழ்களும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தத் திட்டம் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்றழைக்கப்படுகின்றது.

இதில் விண்ணப்பிக்க வீட்டில் உரிமை அல்லது வாடகை ஆவணங்கள், வேலை தொடர்பான தகவல்கள், ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் இணைவர்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அதன்படி சிஷோ, கிஷோர் பிரிவு மற்றும் தரும் பிரிவு என்று வகைப்படுத்தப்படும். இவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதில் முறையான வட்டி விகிதம் பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு வங்கியிலும் வட்டி விகிதம் மாறுபடும்.

அதனுடன் இந்த திட்டம் மூலம் பெறப்படும் கடன் தொகைக்கு இணையாக எந்த ஒரு சொத்து சம்பந்தப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.இது பற்றி மேலும் கூடுதல் விவரங்களை அறிய அருகில் உள்ள வங்கிக் கிளைக்கு சென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதற்கான விண்ணப்பத்தை வங்கியில் பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து சுயதொழில் தொடங்க 10 லட்சம் வரை கடன் தொகையை நீங்கள் பெற முடியும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

கடன் விண்ணப்ப படிவத்தை (Application) https://www.mudra.org.in/Home/PMMYBankersKit இலிருந்து பதிவிறக்கவும்

படிவ விவரங்களை சரியாக நிரப்பவும்

பொது அல்லது வணிகத் துறை வங்கியைக் கண்டறியவும்

வங்கியின் மற்ற அனைத்து முறைகளையும் முடிக்கவும்

இந்த செயல்முறை முடிந்ததும், கடன் அனுமதிக்கப்படும்

முத்ரா ஷிஷு கடனைப் பெறக்கூடிய வணிகங்கள்

சுய உரிமையாளர்கள்

கூட்டாண்மை (Partnerships)

சேவை துறை நிறுவனங்கள்

மைக்ரோ தொழில்கள் (Industries)

கடைகளை சரிசெய்தல் (Shops)

லாரிகளின் உரிமையாளர்கள் (Truck)

உணவு சேவை வணிகங்கள்

விற்பனையாளர்கள் (பழங்கள் மற்றும் காய்கறிகள்)

மைக்ரோ உற்பத்தி நிறுவனங்கள்

தேவையான ஆவணங்கள்:

அடையாள சான்று

இருப்பிட சான்று

இயந்திரங்கள் மற்றும் பிற பொருட்களின் மேற்கோள்கள் (quotations)

பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

வணிக அடையாளத்தின் சான்று

வணிக முகவரியின் சான்று

இத்திட்டத்திற்கு உத்தரவாதம் தேவையில்லை. மேலும், பிராசஸிங் கட்டணமும் கிடையாது.

Categories

Tech |