தூய்மையான சிங்காரச் சென்னை உருவாக்குவதை கருத்தில்கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி சுவரொட்டிகளை அகற்றும் பணியை தொடங்கியுள்ளது. மக்கள் தங்கள் பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என்றால் 1913 என்ற உதவி எண்ணை அழைத்தாள் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சுவரொட்டிகளை அகற்றுவார்கள் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Categories