முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்க தபால் அலுவலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து கணக்கு தொடங்கலாம்.
முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் அதே சமயம் அதற்கேற்ற வட்டியும் வருமானமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தபால் அலுவலகத்தில் ஒரு அட்டகாசமான பிளான் உள்ளது. அது தபால் அலுவலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து கணக்கு தொடங்கலாம். மேலும் இதுஒரு ஐந்து ஆண்டுகால திட்டமாகும். தொடர்ந்து பணத்தை சேமித்து அதை பார்க்க விரும்புவோருக்கு இத்திட்டம் நல்ல சாய்ஸ். இதனை தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்டோர் தனியாகவோ கூட்டாகவோ கணக்கு தொடங்கலாம்.
மேலும் கூட்டணியில் 13 பேர் வரை இடம்பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இதனை அடுத்து 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் மனநலம் மாற்றுத்திறனாளிகள் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கு தொடங்கலாம். இந்த கணக்கு தொடங்குவதற்கு 100 ரூபாய் போதும். அதன் பின்னர் பத்து ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்து வரலாம். இத்திட்டம் ஆண்டுக்கு 5.8% வட்டி வீதம் வழங்கப்படுகிறது. மேலும் தொடர் வைப்பு நிதி கணக்கில் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகளாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் அருகில் உள்ள தபால் அலுவலகத்துக்கு சென்று கணக்கு தொடங்கி கொள்ளலாம்.