Categories
மாநில செய்திகள்

மக்களே சூப்பர் குட் நியூஸ்…. தமிழகம் முழுவதும் மின் கட்டணம்….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகம் முழுவதும் அனைவருக்கும் தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் வழங்கி வருகிறது. இவற்றில் பல்வேறு துறையினருக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் வேறுபடுகிறது. அந்த வகையில் விவசாயத்துக்காக வழங்கப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால் தொழில்துறை பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து பிற பிரிவினருக்கு குறைந்த அளவிலான கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படும். இந்த கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார அளவு கணக்கிடப்பட்டு மின்வாரியத்தால் வசூலிக்கப்படுகிறது.

இதனிடையில் கொரோனா காலக்கட்டத்தில் நேரடியாக வீடுகளுக்கு சென்று மின்சார அளவை கணக்கிட முடியாததால் தங்களின் முந்தைய மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கூடுதல் கால அவகாசமும் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அனைத்து துறைகளும் வழக்கம்போல செயல்பட தொடங்கியுள்ளன. அந்த அடிப்படையில் மின் கணக்கீடு செய்யப்பட்ட 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த கால அவகாசம் முடிவதற்குள் மின் கட்டணத்தை செலுத்தவில்லையெனில் அபராத தொகையுடன் சேர்த்து மின்கட்டணத்தை செலுத்த வேண்டும்.

அதாவது வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போது மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் அபராத தொகையுடன் மின் கட்டணம் செலுத்தும் சூழல் ஏற்படுகிறது. இதனால் இதனை தவிர்க்கும் அடிப்படையில் தற்போது முன்கூட்டியே மின் கட்டணத்தை செலுத்தி கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டும். இத்தொகைக்கு ரிசர்வ் வங்கி வைப்பு நிதிகளுக்கு நிர்ணயிக்கும் வட்டியை பொறுத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வட்டி நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி இந்த வருடத்துக்கு 2.7% வட்டியை ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |