Categories
தேசிய செய்திகள்

மக்களே சூப்பர் குட் நியூஸ்….வீடு தேடி வந்து கடன் வழங்கும் திட்டம்…. சிறப்பு முகாம் ஏற்பாடு ….!!!!

இந்திய நாடு விடுதலை அடைந்து, 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அதை கொண்டாடும் வகையில், ‘அமிர்த மகோத்சவம்’ என்ற பெயரில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அதன் ஒரு பகுதியாக, நேற்று (ஜூன் 8) மேலும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் மாபெரும் கடன் வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு கடன் வசதி தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கவும் மற்றும் பல்வேறு அரசு திட்டங்களில் சேர்வது தொடர்பாகவும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நேற்று நடத்தப்பட்டன. இந்நிலையில் இத்திட்டம் மூலம் கடனுதவிகள் மக்களுக்கு சென்று சேருவதை மையமாகக் கொண்டு  செயல்படுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட அளவிலான திட்டங்கள், அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக்களால் திட்டமிட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது.

மேலும் இந்தத் திட்டமானது  ஜூன் 6 முதல் 12 வரை நடைபெறும் நிதியமைச்சகத்தின் ’ஐகானிக்’ வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் மக்களின் பங்கேற்புடன் விடுதலையின் அமிர்த மகோத்சவக் கொண்டாட்டத்தை, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது ஆகும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதமரின் சுரக்‌ஷா பீமா யோஜனா மற்றும் அடல் பென்சன் திட்டம் போன்ற திட்டங்களில் பதிவு செய்வது போன்ற சேவைகளும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |