வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கார்டு இல்லாத ஏடிஎம் பரிவர்த்தனையை தனியார் வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி, கீழ்க்கண்ட முறைகளில் இருந்து பணத்தை எடுக்கலாம்.
- முதலில் ஏடிஎம் மிஷினில் யுபிஐ ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதையடுத்து தேவையான தொகையை பதிவிடவும்.
- மேலும் பரிவர்த்தனைக்கான QR கோடு உருவாகும்.
- இதனைத் தொடர்ந்து அந்த QR கோடை ஸ்கேன் செய்யவும்.
- இதன் பிறகு, யுபிஐ பின்னை பதிவிடவும்.
- இதையடுத்து, உங்களது பணம் உங்கள் கைகளில் வரும்.
இவ்வாறு கார்டு இல்லாமல் பணபரிவர்த்தனையை UPI மூலம் பயன்படுத்துவதால், கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது என்றும், இதனால் எந்தவித முறைகேடும், இதில் செய்ய வாய்ப்பில்லை. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.