ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகளை மத்திய, மாநில அளவில் அறிவிக்கப்படும். அடுத்து வரும் மாதம் தான் அமலுக்கு வரும். இதுபோக காலக்கெடுகளும் விதிக்கப்படும். இதன்படி செப்டம்பர் மாதம் மாறப்போகும் விதி முறைகள் பற்றி இப்போது பார்க்கலாம். ஆதார்- பான் கார்டு இணைக்க வேண்டும் என்று வங்கிகளும் அறிவித்துள்ளன. அதன்படி எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆதார் -பான் கார்டை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாகவே சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் செப்டம்பர் மாதமும் விலை மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இணைக்காவிட்டால் பிஎஃப் அக்கவுண்டுக்கு பணம் செலுத்த முடியாது. செப்டம்பர் மாதம் முதல் புதிய விதிகளின் படி GSTR-3B படிவத்தை தாக்கல் செய்யாதவர்களால் GSTR-1 படிவத்தை தாக்கல் செய்ய முடியாது.