செப்டம்பர் 30க்கு மேல் 386 செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்தொடர்ச்சியாக 35வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை முதல்தவணை தடுப்பூசியை 96.26%மும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 90.15% மக்களும் செலுத்தியுள்ளனர். 12வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடன் 6 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை பூஸ்டர் தடுப்பூசி தமிழக அரசால் இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்த தேதிக்கு மேல் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட நினைத்தால் 3386 செலுத்தி போட்டுக் கொள்ள வேண்டும்”என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம்களில் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.