Categories
மாநில செய்திகள்

மக்களே செம நியூஸ்… நாளை முதல் மீண்டும்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் நாளை முதல் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மின்சார ரயில்களும் சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி வாரத்தில் ஆறு நாட்கள் கூடுதல் ரயில்களும், ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் குறைந்த அளவு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் சென்னையில் நாளை முதல் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்களில் எண்ணிக்கை 401 ஆக உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சென்னை – அரக்கோணம் மார்க்கமாக 147 சேவைகள், சென்ட்ரல்  – கும்மிடிப்பூண்டி மார்க்கமாக 60 சேவைகள், கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கமாக 136 சேவைகள், கடற்கரை- வேளச்சேரி மார்க்கத்தில் 52 சேவைகள் இனி வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |