இந்தோனேஷியாவிலுள்ள தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாறிய ஓமிக்ரான் உறுதி செய்யபட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாறிய ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்தோனேசியாவில் முதன்முதலாக தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஓமிக்ரானின் அறிகுறிகள் எதுவும் இல்லாத அந்த தூய்மைப் பணியாளர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை மந்திரியான சாதிக்கின் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதாரத்துறை மந்திரியான சாதிக்கின் இந்தோனேஷியாவில் முதன்முதலாக ஓமிக்ரான் கால்பதித்துள்ள நிலையில் அனைவரும் கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.