2022 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி இந்த தீபாவளிக்கு ஜியோ 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். ஆனால் முதல் சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும். இந்த நகரங்களில் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகியவை அடங்கும். மேலும் மற்ற நகரங்களில் வசிக்கும் மக்கள் டிசம்பர் 2023க்குள் ஜியோ 5ஜி அதிவேக இணைய அலைக்கற்றலை பெறுவார்கள் என்று அம்பானி உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், “ஜியோ 5G உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட 5G நெட்வொர்க்காக இருக்கும். எங்கள் 4ஜி நெட்வொர்க்கிலிருந்து சுயாதீனமான 5ஜியின் சமீபத்திய பதிப்பான ஸ்டாண்ட்-அலோன் 5ஜியை ஜியோ வரிசைப்படுத்தும்,” என்று ஆர்ஐஎல் தலைவர் ஏஜிஎம்மில் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், 4ஜி சேவைகளை விட 5ஜி வேகம் 10 மடங்கு வேகமாக இருக்கும் என்று கூறினார்.