Categories
மாநில செய்திகள்

மக்களே…. ஜூன் 14 முதல் ஆதார் கார்டு சிறப்பு முகாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!ட்

இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். அதில் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு நீல நிறத்தில் இருக்கும் இதை பால் ஆதார் எனப்படுகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு ஆதார் கார்டு வழங்குவதற்கு பிறப்புச் சான்றிதழ் மிக முக்கியம். குழந்தைகளுக்கு 5 வயது ஆகும் போது குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்கள் கொடுத்து அப்டேட் செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் எப்போதும் ஆதார் கார்டை நாம் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

அதாவது முகவரி, பிறந்த தேதி, புகைப்படம் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை எளிதாக UIDAI இணையதளம் மூலமாக நாம் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு போன்றவற்றை நாம் நேரடியாக ஆதார் சேவை மையத்திற்கு சென்று தான் மாற்ற வேண்டும். அதனைத் தவிர அஞ்சலகங்கள் மற்றும் ஆதார் சேவை மையங்களில் எளிதில் விவரங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சியில் 33 வார்டுகளிலும் அஞ்சல் துறை இணைந்து நகராட்சி நிர்வாகம் சார்பாக ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வருகின்ற ஜூன் 14-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை சதாசிவம் வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 15 முதல் 23 மற்றும் 25 ஆவது வார்டு மக்களுக்கு ராஜலட்சுமி நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கைரேகை பதிவு உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |