Categories
தேசிய செய்திகள்

மக்களே… தடுப்பூசி போட்டால் டிவி …! மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு …!!

இந்தியாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விகிதம் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகளை வழங்குவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி, ப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநிலத்தில் சந்திரபூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விகிதத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பது குறித்து சந்திரபூர் மேயர் சஞ்சித் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வோருக்கு பரிசுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நவம்பர் 12ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும்.

முதல் பரிசாக பிரிட்ஜ் 2ஆம் பரிசாக வாசிங்மிசின் 3-வது பரிசாக எல்இடி டிவி வழங்கப்படும் என்றும், இது போக ஆறுதல் பரிசாக 10 பேருக்கு மிக்சி, கிரைண்டர்கள் வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சந்திரப்பூரில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருப்பதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |