Categories
மாநில செய்திகள்

மக்களே….! தமிழகத்திற்கு பெரிய ஆபத்து காத்திருக்கு…. எச்சரிக்கை விடுக்கும் IPCC அறிக்கை….!!!!

IPCC வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தென்னிந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு பெரிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைதல் காரணமாக பல இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இதை விரைவாக தடுத்து நிறுத்தாவிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் நாம் வாழும் பூமியில் இருக்காது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் WHO மற்றும் UNEP ஆகியவற்றால் பருவநிலை மாற்றம் தொடர்பாக உலக நாடுகளுக்கு இடையில் குழு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை ஆங்கிலத்தில்  Intergovernmental Panel on Climate Change என்று அழைப்பார்கள். இதன் சுருக்கமே  IPCC என்பதாகும். இதில் 195 நாடுகள் உறுப்பினராக உள்ளனர்.

புவி வெப்பமடைதல் காரணமாக ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் குறித்து ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டு அரசுகளுக்கு அறிக்கை அளித்து எச்சரிக்கை செய்கின்றது. அந்த வகையில் கடந்த 28ம் தேதி IPCC  தனது அறிக்கையை வெளியிட்டது. இதில்  இடம்பெற்றுள்ள அனைத்து தகவல்களும் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டால் இயற்கைக்கும் மனிதர்களுக்கும் ஏற்கனவே பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மறுமுறை சரிசெய்ய முடியாத அளவிற்கு சேதங்கள் விளைவிக்கப் பட்டுள்ளன. இதன் காரணமாக உணவு உற்பத்தி, இயற்கை சூழல், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இவற்றின் தாக்கத்தை காண முடிகின்றது.

தற்போதைய அளவில் பசுமை இல்ல வாயுக்கள் தொடர்ந்து வெளியிட்டு வருவதால் நடப்பு நூற்றாண்டின் இறுதியில் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் கடலோர இந்தியாவில் 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை சென்றுவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புவனேஸ்வர், சென்னை, மும்பை, அகமதாபாத் ஆகிய நகரங்களில் 32 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை வெட் பல்ப் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கடல் மட்டம் அதிகரித்து அதிக ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள நாடுகளில் இந்தியாவும் இருப்பதாக கூறப்படுகின்றது.

அதுமட்டுமில்லாமல் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் எதிர்பாராத வெள்ளம் ஏற்பட்டு நாட்டின் விவசாயம் பெருமளவு பாதிக்கும் என்றும், வரும் 2050 இல் இந்தியாவில் 40 சதவீதம் பேர் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிப்பார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் பருவநிலை மாற்றம் மிகவும் மோசமான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து உருவாகும் புயல், வெப்ப அலைகள் ஆகியவற்றால் விவசாயிகளும் மீனவர்களும் தான் அதிக அளவில் பாதிப்புகள் என்று கூறப்படுகின்றது. பருவநிலை மாற்றங்களை அறிந்து பொதுமக்களும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் வாழ்க்கைமுறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது .

Categories

Tech |