தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம்:-
போளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (மார்ச்.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போளூர் பேரூராட்சி , மண்டகொளத்தூர், அத்திமூர், கலசபாக்கம், ராந்தம் , ஜடாதாரிகுப்பம், பெலாசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம்:-
விழுப்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இன்று (மார்ச்.5) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை விழுப்புரம், திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலை, மாம்பழப்பட்டு ரோடு, செஞ்சி ரோடு, வண்டிமேடு, வடக்கு தெரு, கே.வி.ஆர்., நகர், விராட்டிக்குப்பம், நன்னாடு, நன்னாட்டாம்பாளையம், பாப்பான்குளம், திருவாமாத்துார், ஓம்சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பில்லுார்,
ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாதசுாமி நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, வி.அகரம், ஜானகிபுரம், தொடர்ந்தனுார், வழுதரெட்டி, சாலை அகரம், கோலியனுார், பிள்ளையார்குப்பம், பொய்யப்பாக்கம், கோலியனுார் கூட்ரோடு போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
திருவாரூர் மாவட்டம்:-
மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறு உள்ளதால், இதற்குட்பட்ட மன்னாா்குடி, அசேசம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, எம்பேத்தி, செருமங்கலம், மூவாநல்லூா், பருத்திக்கோட்டை, நாவல்பூண்டி, பாமணி, சித்தேரி, கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச்.5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருவாரூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இன்று (மார்ச்.5) பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி, கீழ்வேளூா் 33/11 கி.வோ. துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கீழ்வேளூா், தேவூா், கோகூா், அகரகடம்பனூா், ஆழியூா், கூத்துாா், புலியூா், ராதாமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச்.5) காலை 9 முதல் பிற்பகல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.
தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் இன்று (மார்ச்.5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் ஜி ஏ கெனல் சாலை, திவான் நகர், சின்னையா பாளையம், மிஷன் சர்ச் சாலை, ஜோதி நகர், ராதாகிருஷ்ணன் சாலை ஆகிய பகுதிகளுக்கும் பர்மா பஜார், ஜுபிடர் தியேட்டர் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்என்எம் ரஹ்மான் நகர், அரிசி கடை தெரு, வாடிவாசல் கடை தெரு ஆகிய பகுதிகளுக்கும் பழைய மாரியம்மன் கோவில் சாலை, ராஜபாளையம் கரம்பை சாலை தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டி, ராஜபாளையம் ராயல் சிட்டி, எஸ்என்எம் நகர் ஆகிய பகுதிகளுக்கும் இன்று (மார்ச்.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தர்மபுரி மாவட்டம்:-
பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (மார்ச்.5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வெங்கடசமுத்திரம், பாப்பிரெட்டிப்பட்டி, மெணசி, காளிப்பேட்டை, சாமியாபுரம் கூட்ரோடு, அ.பள்ளிப்பட்டி, மஞ்சவாடி, H. புதுப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, கவுண்டம்பட்டி, எருமியாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம்:-
வீரபாண்டி துணை மின் நிலையத்தில் நொச்சிப்பாளையம் பீடரில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மின் கம்பி மாற்றும் பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (மார்ச்.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட நொச்சிப்பா ளையம் பீடர் பகுதிகள், சபாபதி நகர், டி. கே. டி. மில் நால்ரோடு, சின்னக்கரை போலீஸ் செக் போஸ்ட், பல்லடம் ரோடு, முல்லை நகர் முதல் மற்றும 2 – ம் வீதி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
விருதுநகர் மாவட்டம்:-
விருதுநகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (மார்ச்.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வினியோகம் பெறும் பகுதிகளான சூலக்கரை, ஆட்சியர் அலுவலகம், ஆயுதப்படை வளாகம், போலீஸ் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே.செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மார்டன் நகர், மாத்தி நாயக்கன்பட்டி தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணி நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வினியோகம் பெறும் பகுதிகளான ராஜபாளையம் தாலுகா அலுவலகம், பச்சை மடம், ஆவாரம்பட்டி, காந்தி கலை மன்றம், மதுரை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை, திருவள்ளுவர் நகர் ,தென்றல் நகர் , மாடசாமி கோவில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, ரயில்வே பீடர் ரோடு, சம்மந்தபுரம் , தென்காசி ரோடு ,அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனார் கோயில் ,ராம்கோ காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் வினியோகம் பெறும் பகுதிகளான வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே. மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், பனையடிபட்டி, சங்கரபாண்டியபுரம் செவல்பட்டி அப்பநாயக்கன்பட்டி, மூர்த்தி நாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம் மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம் ,அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பாவாலி, சந்திரகிரிபுரம்,வி. சுந்தரலிங்காபுரம், குமாரலிங்கபுரம், வீரச்செல்லையாபுரம், சீனியாபுரம் நாராயணபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம்:-
குமாரபாளையம் பகுதியில் இன்று (மார்ச்.5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், வேமன் காட்டுவலசு, சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்ப நாயக்கன்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம்:-
ஆசாரிபள்ளம் மின் வினியோக பிரிவுக்கு உட்பட்ட தம்மத்துக் கோணம் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் வருகிற 7 – ந் தேதி ( திங்கள்கிழமை ) நடக்கிறது. எனவே , அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தம்மத்துக்கோணம் , ராஜாக்கமங்கலம் , ஞானம்நகர் , எறும்புக்காடு , தாராவிளை, காரவிளை, பருத்திவிளை, அளத்தன்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
திருநெல்வேலி மாவட்டம்:-
திருநெல்வேலி சந்திப்பு, மீனாட்சி புரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணாரப்பேட்டை, இளங்கோ நகர், பரணி நகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மெரி சார்ஜென்ட் பள்ளி வரை உள்ள திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச்.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.