தமிழகத்தில் குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக பல மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில தினங்களுக்கு லேசான பனிமூட்டம் நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பல மாவட்டங்களில் குளிர் அதிகமாக இருப்பதால் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. குளிர் அதிகமாக இருக்கும் என்பதால் குழந்தைகள், வயது முதிந்தவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் காலை நேரத்தில் அதிக அளவில் பனி பொழியும் என்பதால் இனி சூரிய உதயம் தாமதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.