Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே!…. தமிழகத்தில் வரும் 21, 22-ஆம் தேதிகளில்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் வருகிற 21, 22ஆம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமானது தகவல் தெரிவித்து உள்ளது.

வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் ஏராளமான மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்ற வாரம் வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக பல பகுதிகளில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் மேலும் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை(நவ.19) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்பதால் வருகிற 21, 22-ம் தேதிகளில் தமிழகத்தில் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. அத்துடன் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் எனவும் கூறியுள்ளது.

Categories

Tech |