Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் 8 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. இதோ முழு லிஸ்ட்…!!!!

அக்டோபர் மாதத்தில் பண்டிகைகள் வருவதால் 21 நாட்கள் வங்கி விடுமுறை என செய்திகள் பரவி வருகின்றன.

மக்களின் வசதிக்கு ஏற்ப பல தனியார் துறை மற்றும் பொதுத்துறை வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் விடுமுறை அளிக்கப்படும். இது குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும். அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேசிய விடுமுறை காரணமாக இந்த மாதம் வங்கிகளில் அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவை RBI வெளியிட்ட பொது கணக்கு என்றும், மாநிலங்களுக்கு ஏற்றாற்போல விடுமுறைகள் மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் அக்.2 (காந்தி ஜெயந்தி), அக். 4 (ஆயுத பூஜை), அக்.5 (விஜயதசமி), அக். 8 (மிலாது நபி), அக்.9, அக்.22 (4வது சனிக்கிழமை), அக்.23, அக்.24 (தீபாவளி) என 8 நாட்கள் மட்டுமே வங்கி விடுமுறை விடப்படும் என கூறப்படுகிறது.

Categories

Tech |