Categories
மாநில செய்திகள்

மக்களே! தமிழகம் முழுவதும் இன்றே கடைசி நாள்…. உடனே போய் போட்டுக்கோங்க…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 14ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை 9 மணியிலிருந்து  200க்கும் மேற்பட்ட வரிசையில் நின்று தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.

Categories

Tech |