தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் நடைபெறும் இந்த முகாமில் முதல் தவணை, இரண்டாவது தவணை போடாத 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறைகிறது என அலட்சியமாக இருக்காதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுநாள் வரை 9.93 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.