Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகம் முழுவதும் நாளை( செப்டம்பர் 11) மறக்காம போய் போட்டுக்கோங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து தீவிரப்பட்டு வருகிறது. இதுவரையில் 35 மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் மூலம் 5 கோடியே 22 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 36வது மெகா சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது.

நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. முன் எச்சரிக்கை என்னும் பூஸ்டர் தடுப்பூசி போட பொதுமக்களிடம் அதிக ஆர்வம் இல்லை. இந்த தடுப்பூசி வருகிற 30ம் தேதி வரை இலவசமாக போடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2000 சிறப்பு முகாம்கள் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |