தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு உதவும் வகையில் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டு உள்ள நிலையில், பொதுமக்கள் பால் விநியோகம் மற்றும் கொள்முதல் போன்றவை குறித்த விவரங்களை பெற தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ள இந்த எண்ணிற்கு அழைத்தால் உடனடியாக அதிகாரிகள் விளக்கம் தருவார்கள்.