Categories
மாநில செய்திகள்

மக்களே… தமிழகம் முழுவதும் இன்று… மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்…!!

தமிழகம் முழுவதும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாகவே 28,91,21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இரண்டாவதாக செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் இலக்கை விடவும் கூடுதலாக 16,43,879 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஞாயிறு) தமிழகம் முழுவதும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த மெகா முகாமில் 15 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று நடக்கும் 3ஆவது சிறப்பு முகாமில், 20 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு போடப்பட உள்ளதால் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..

Categories

Tech |