தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பின் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டது.
மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைகளுக்கு நேரடி கட்டுப்பாடு உள்ளிட்டவை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.