Categories
மாநில செய்திகள்

மக்களே!!… தமிழகம் முழுவதும் இன்று (மார்ச்.5)…. அரசு அதிரடி அறிவிப்பு…. உடனே கிளம்புங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 3 வாரங்களாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. இந்நிலையில் சென்ற 3 வாரங்களாக தடைபட்டிருந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் இன்று (மார்ச்.5) நடைபெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்ந்து ஒரு இயக்கமாக நடைபெற்று வருகிறது. கடந்த 3 வாரங்களாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாமல் இருந்தது. ஏனெனில் போலியோ சொட்டு மருந்து முகாம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் பண்டிகையின் காரணமாக கடந்த 3 வாரங்களாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாமல் இருந்தது. இதுவரையிலும் 22 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 3 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இன்று (மார்ச் 5) சனிக்கிழமை 23-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |