Categories
மாநில செய்திகள்

மக்களே…. தயவுசெய்து ஆன்லைன் ரம்மி விளையாடாதீங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி மோசடி விளையாட்டு யாரும் விளையாட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் முதலில் ஜெயிக்கிற போல ஆசையை தூண்டி விட்டு அதன்பிறகு அனைத்து பணத்தையும் விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சினிமா நடிகர்கள் விளம்பரத்தில் நடிக்கிறார்கள் என்பதற்காக ஆன்லைன் ரம்மி யாரும் விளையாட வேண்டாம். இது உண்மையான ஆன்லைன் ரம்மி விளையாட்டு கிடையாது. ஆன்லைன் ரம்மி மோசடி. தயவுசெய்து பொதுமக்கள் ஆன்லைன் ரம்மி விளையாடாதீர்கள். இதனை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்ப பிரச்சனை மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |