இலங்கை அமைச்சர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக எச்சரித்துள்ளார்.
இலங்கையின் கொழும்பு நகரில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பில, நாட்டில் கடன் தொகை அந்நிய செலவாணி கையிருப்பை விட அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் நாட்டிலிருந்து அந்நிய செலவாணி வெளியே சென்று விடக்கூடாது என்பதால் தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தானியங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
அதேபோல் எரிபொருள் தட்டுப்பாடு இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஏற்படும் என்று கூறியுள்ளார். எனவே மத்திய வங்கி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கரன்சியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேசமயம் தற்போது எரிபொருளை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வரும் நாட்களில் ஏற்படும் மின்வெட்டை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.