Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே..! தரமற்ற உணவுப்பொருள் விற்பனை செய்தால்…. இந்த நம்பருக்கு தெரிவிக்கலாம்…!!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தரமற்ற உணவுப் பொருட்கள் கடைகளில் விற்கப்படுவதால் அதை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு மட்டுமில்லாமல் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

எனவே இதனை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அவ்வப்போது உணவகங்களில் ஆய்வு நடத்தி காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையின் 9444042322 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |