தேசத்தின் கொடி நாள் நாளை அனுசரிக்கப்படுவதால் மக்கள் நிதி தந்து உதவுங்கள் என்று தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
நாட்டில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 7ஆம் தேதி கொடி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நாட்டின் இறையாண்மையைக் காக்கும் உயரிய சேவையில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் தியாகத்திற்கு நாட்டு மக்கள் நன்றிக் கடன் செலுத்துவார்கள்.
இதனையடுத்து நாளை கொடி நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நம் படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதி தந்து உதவுங்கள் மக்களே” என்று கூறியுள்ளார்.