தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (15.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருநெல்வேலி
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட களக்காடு மற்றும் பணகுடி துணை மின் நிலையங்களுக்கு இன்று காலை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. பணகுடி பகுதிக்குட் பட்ட பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்ப வனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்கள். களக்காடு பகுதிக்குட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்கள். இந்த தகவலை வள்ளியூர் மின்வாரிய செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்தார்.
குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, குழித்துறை கோட்டத்துக்குட்பட்ட முஞ்சிறை மற்றும் நடைக்காவு துணை மின் நிலைய பகுதிகளில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான முஞ்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை, சென்னித்தோட்டம், மாமூட்டுக்கடை, விரிகோடு , கொல்லஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்றும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.