Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மக்களே…! திறந்தாச்சு பயன்படுத்திக்கோங்க… இனி இது உங்களுக்கு தான் …!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நவீன சேமிப்புக் கிடங்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு, இன்று திறக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அமைந்துள்ள நவீன சேமிப்பு கிடங்கில் நடைபெற்ற சிறப்பு விழா நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா கலந்து கொண்டார்

Categories

Tech |