Categories
உலக செய்திகள்

மக்களே…! தீராத “தலைவலி இருந்தா” உடனே கிளம்பிருங்க… அப்போ நான் “விளையாட்டா நினைச்சிட்டேன்”…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்…!!

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 20 வருடங்களாக தலையில் சுமார் 0.5 முதல் 1 சென்டி மீட்டர் அளவுடைய புல்லட்டுடன் வாழ்ந்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவருக்கு கடந்த 20 வருடங்களாக தீராத தலைவலி இருந்துள்ளது. ஆனால் அவர் எந்தவித சிகிச்சையும் பெறாமலேயே இருந்துள்ளார். இதனையடுத்து இறுதியாக சிகிச்சை பெற சென்ற அவரை மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்கள். அந்த பரிசோதனையின் முடிவில் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

ஏனெனில் 28 வயதுடைய அந்த நபரின் தலையில் 0.5 முதல் 1 சென்டி மீட்டர் அளவுடைய புல்லட் ஒன்று இருந்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த நபருக்கே தனது தலையில் புல்லட் எவ்வாறு வந்தது என்பது குறித்து தெரியவில்லை. இருப்பினும் அவர் கொஞ்சம் யோசித்துப் பார்க்கையில் தன்னுடைய 8 ஆவது வயதில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சொந்த சகோதரர் ஒருவர் பயன்படுத்திய ஏர்கன் மூலம் இந்த புல்லட் தலையில் பாய்ந்திருக்க கூடும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறியதாவது, பொதுமக்கள் லேசான தலைவலி எப்போவாவது வந்தால் அதனை பொருட்படுத்தாமல் கடந்து செல்லலாம் என்றுள்ளார்கள். ஆனால் தீராத தலைவலி நீண்ட நாட்களுக்கு இருந்தால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள் என்றுள்ளார்.

Categories

Tech |