நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதார் என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அரசின் எந்த ஒரு சலுகையை பெற வேண்டும் என்றாலும் இந்திய குடிமகன் என்று அடையாளத்தை குறிக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லாத என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் தமிழக அரசே புதிய எண் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எண் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு தளம் என்னும் தளத்தில் வழங்கப்படும்.
தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு பத்து முதல் 12 இலக்கங்களில் MAKKAL ID என்னும் பெயரில் இந்த என் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐடி கொண்டு வருவதற்கு முக்கிய காரணமே, தமிழக அரசின் நலத்திட்டங்களை தமிழக மக்கள் பெறுவதற்காகவே என்று கூறப்படுகிறது. வெளிமாநிலத்தவர்கள் பலர் இங்கு தங்கி, அரசின் நலத்திட்டங்களை ஏமாற்றி பெறுகின்றனர். அதை தடுப்பதற்கே என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அரசு இது குறித்து இன்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை.