Categories
மாநில செய்திகள்

மக்களே! தேவையற்ற பதற்றம் வேண்டாம்….. மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்த பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை  5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சையளிக்க போதிய ஏற்பாடுகள் என்றும், கூடுதலாக 50,000 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன என்றும், தேவையற்ற பதற்றம் வேண்டாம் என்றும், ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு வேண்டும் என்றும், மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |